அருணாச்சலத்தின் அலுவல் வேலையில்லா திண்டாட்டத்தை விளக்கும் கதை. மனைவி உபாத்தியாயினி வேலைக்கு போகிறாள். கதை எழுதி பெர்னாட்ஷா செஸ்டர்டர்ன் போல் பணம் சம்பாதிப்பதாக கணவன் பகல் கனவு காண்கிறான். இறுதியில் 60 ரூபாய் வேலை கிடைக்கிறதாக நண்பரிடம் கூற அவர் வந்து பார்க்கிறார். வீட்டு வேலை செய்வதால் வேலைக்காரி செலவு முதலியன மிச்சம், அலைச்சலும் இல்லை, சேர்ந்து இருக்கும் சுகமான வாழ்வு என்கிறாள் மனைவி . ஊதிய உயர்வு ஒரு குழந்தை அதிகமானால் என்றும் கூறுகிறாள். இந்த ஏற்பாடு அன்பு ஏற்படுத்துமா என்று நண்பர் திரும்பிப் பார்க்க "வெட்கம் கெட்டவர்கள் நான் அப்பால் போகும் வரையில் தாமதிக்க கூடாதா?" என்று கூறுவதாக முடிக்கிறார். குடியானவர், தொழிலாளிகளுக்கு சித்திரமும் கைப்பழக்கம் பட்டினியும் வயிற்றுப் பழக்கம் என்று புதுமொழி உண்மையை விளக்கும் நல்மொழி.
(Tags : Arunachalathin Aluval Kalki Audiobook, Kalki Audio CD )