"இது திரு. சாண்டில்யன் அவர்களின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றாகும். இந்நூல் இவரது வழக்கமான சோழ கதாநாயகனுக்கு பதிலாக ஒரு பாண்டிய கதாநாயகனைக் கொண்ட கதையாகும். கதாநாயகன் பெரிய வீர பாண்டியன், சுந்தரபாண்டியனின் சகோதரர் ஆவார். தேச வருமானத்தில் முத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்கொள்ளை பற்றிய விசாரணையை மையமாகக் கொண்டது. அதுசமயம் சுந்தரபாண்டியனின் மகள் முத்துகுமாரி கடத்தப்படுகிறாள். குற்றவாளியாக சேர மன்னன் வீர ரவி உதயமார்த்தாண்டன் கண்டறியப்படுகிறான். சேர, பாண்டிய மன்னர்களுக்கிடையே போர் மூளும் சூழலையும், போர் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. பாண்டியர்கள் நிலைமை மோசமாகிறது.பாண்டியர்கள் அவர்களது பேரரசை மீண்டும் உருவாக்க, குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை வைத்துக்கொண்டு எப்படி சாதுர்யமாக வெற்றியடைந்தார்கள் என்பது கதையின் சுவாரஸ்யமான கருவாகும்.கதை சரித்திர நிகழ்வுகளை ஓட்டியிருந்தாலும் வீர பாண்டியனின் காதலி போன்ற சில கற்பனை பாத்திரங்களும் இதில் உண்டு. வீரபாண்டியனின் காதலியை முற்பகுதியில் வழக்கமான சாதாரண பெண்ணாக சித்தரித்தவர் பிற்பகுதியில் ஆக்ரோஷமான போராளியாக காட்டியுள்ளார்.இறுதிக்கட்டத்தில் கையாளப்படும் பொருளானது தற்காலத்து பீரங்கியை ஒத்த ஒன்றாகும்.அது சற்று மிகையாக தோன்றினாலும் கேட்பவருக்கு இந்நூல் ஒரு காலச்சக்கரத்தை கடந்து வந்ததைப்போன்ற உணர்வினை உண்டாக்கும்."
(Tags : Raja Muthirai - Part 2 Sandilyan Audiobook, Sandilyan Audio CD )